பணத்தை சேமிக்க சில டிப்ஸ் - ஆலோசனைகள்.!money saving some ideas
1 பதிவு செய்யும் பழக்கம் :
- பணத்தைச் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே நாம் செய்ய வேண்டிய முதல் விஷயம் என்னவென்றால் அது பதிவு செய்யும் பழக்கம் தான்.
- ஒரு கையேட்டில் அல்லது நாட்குறிப்பில் செய்யும் செலவைக் குறித்து வைப்பதன் மூலம் நாம் ஒரு மாதத்தில் எவ்வளவு செய்கின்றோம் அதை எவ்வாறு குறைக்கலாம், எங்கெல்லாம் அதிக செலவாகின்றது என ஆராய்ந்து அதை திருத்தி செலவை குறைத்துக் கொள்ள முடியும்.
2 கச்சிதமான & கட்டுப்பாடான நிலையை உருவாக்குதல் :
- இந்த இரண்டாவது முறை சற்று கடினமானதுதான்.
- ஆனால் பின்பற்றினால் நல்ல முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும்.
- நாம் சம்பாதிக்கும் பணத்தை நான்கு முக்கிய பகுதிகளாக பிரித்து செலவு செய்வதாகும்.
- முதலில் வீடு மற்றும் உணவிற்கு - 30 சதவீதம், வாழ்க்கை முறைக்கு 30 சதவீதம், சேமிப்பிற்கு 20 சதவீதம், கடன்களுக்கு 20 சதவீதம் என பிரித்து செலவு செய்யும் போது பணத்தை சேமிக்கலாம்.
3 நோக்கம் வைத்துச் சேமித்தல்
- நாம் இன்னும் ஐந்து வருடத்தில் என்னவாக இருப்போம் அதாவது வீடு, வாகனம் போன்ற வாகனங்களை வாங்குவதற்கான குறிக்கோள் அல்லது கடனே இல்லாத வாழ்க்கை என திட்டமிட்டு செயல்படும் போது நம்மை அறியாமலேயே சேமிக்கலாம்.
- நாம் சம்பாதிக்கும் பணத்தை கவனத்தில் கொள்ளாமல் அதற்கும் கீழாக நிதிநிலை போட வேண்டும்.
- உதாரணமாக 50,000 சம்பளம் வாங்கினால் நாம் 25,000 வாங்குபவராகவும், அதற்கான செலவுகளையுமே பின்பற்ற வேண்டும். இதனால் மேலும் சேமிக்கலாம்.
4 முதலீடு செய்தல் :
- நம்மிடம் இருக்கும் பணத்தை நம்பகமான மற்றும் திருப்தியான முறைகளில் முதலீடு செய்ய யோசிக்க வேண்டும்.
- இவ்வாறு சிறிய முதலீடும் கூட காலப்பகுதியில் பல மடங்கு மதிப்பு மிக்கதாக மாறும்.
- பண மதிப்பானது காலம் மாறமாற மாறிக்கொண்டே தான் இருக்கும் எனவே பணத்தை முறையாக முதலீடு செய்யலாம்.
- இவ்வாறு முதலீடு செய்யும் போது நீங்கள் விரும்பிய இலக்குகளை கூட்டு வட்டி சக்தியின் மூலம் அடையலாம்.
5 நிதி இலக்குடன் செயல்படுதல் :
- எல்லா நேரங்களிலும் நிதி அமைப்பை உருவாக்கி செயல்பட வேண்டும்.
- இந்த நிதி இலக்கானது தனிமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் முதுகெலும்பாக இருக்கும்.
- குறுகிய கால நிதி இலக்கும், நீண்ட இலக்காக பிரித்து அதற்கு ஏற்ற வகையில் செயல்படலாம்.
Tags
#moneysaving
#investment idea
#gold savings plan
#mutual fund
#indexfund
#goldinvestment


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக