செவ்வாய், 12 மார்ச், 2024

Types of gold investment,தங்கம் முதலீடு

 

Types of gold investment

தங்கம் முதலீடு  

Types of gold


  • பொதுவாக தங்கத்தை நாம் திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்காக வாங்குவோம். அப்படி வாங்கினால் நகையாக வாங்குவது சிறந்தது.
  • அப்படியில்லாமல், விலை குறைவாக உள்ளபோது வாங்கி, விலை அதிகமாகும் போது விற்பது அதாவது, விலை குறைவாக உள்ளபோது முதலீட்டுக்காக தங்கத்தை நகையாக வாங்கினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.



தங்கத்தை நான்கு விதமாக வாங்கலாம். 




    1. நகைக்கடைகளில் தங்கத்தை நகையாக வாங்குவது

    • நகைக்கடைக்கு சென்று தங்கத்தை நகையாக வாங்கும் முறையை தான் அனைவரும் பின்பற்றுவோம். 
    • இந்த முறையை பின்பற்றினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.
    • ஏனெனில் உதாரணமாக.. ஒரு கிராம் தங்கம் ரூ.6000 எனில், அத்தொகையை மட்டும் பயன்படுத்தி ஒரு கிராம் தங்கம் வாங்கி வர முடியாது.
    •  ஏனெனில் அந்த தங்கத்திற்கு GST, சேதாரம் (சுமார் 11%) உள்ளிட்ட தொகையை அதிகமாக செலுத்த வேண்டியிருக்கும். 
    • சில சமயங்களில் செய்கூலி தொகையும் செலுத்த வேண்டியிருக்கும். 
    • எனவே முதலீட்டுக்காக தங்கத்தை நகைக்கடைகளில் வாங்கினால் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. 
    • இது லாபத்திற்கு வழிவகுக்காது.மேலும் அந்த தங்கத்தை குறிப்பிட்ட நேரத்தில் விற்பனை செய்தால் அப்போதைய விலைக்கு கிடைக்கும் என்பது சாத்தியமற்றது. 
    • பழைய தங்கம், நகைகளில் உள்ள அழுக்கு உட்பட பலவித காரணங்களுக்காக குறைவான விலைக்கு தான் எடுத்துக் கொள்ளப்படும்.

    2. நகைக்கடைகளில் தங்கத்தை நாணயமாக (Coin) வாங்குவது

    • நகையாக தங்கத்தை வாங்கினால் தான் செய்கூலி, சேதாரம் போடப்பட்டு, அதிக செலவும், நஷ்டமும் ஏற்படுகிறது. 
    • நாம் கோல்ட் coin ஆக தங்கத்தை வாங்கினால் நஷ்டம் ஏற்படாது அல்லவா? என பலரும் கோல்ட் coin வாங்குவர். இதிலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
    • ஏனெனில் கோல்ட் coin-க்கும் GST, Making Charge உள்ளிட்டவை செலுத்த வேண்டி இருப்பதால் கோல்ட் coin-க்கும் அதிகமான தொகையை செலவு செய்ய வேண்டியிருக்கும். 
    • எனவே முதலீட்டுக்காக தங்கத்தை கோல்ட் coin-ஆக வாங்கினால் எதிர்பார்க்கும் அதிகமான லாபம் Wellington.

    3. தங்கத்தை பங்குச்சந்தைகளில் வாங்குவது

    • பங்குச்சந்தையில் தங்கத்தை முதலீட்டுக்காக GOLD ETFல் வாங்கலாம். 
    • GOLD ETF என்பதில் வெறும் ரூ.50க்கும் கூட தங்கத்தை வாங்கி கொள்ளலாம். அதிலும் இன்றைய விலைக்கே தங்கத்தை பெற்றுக்கொள்ளலாம்.
    • பங்குச்சந்தையில் தங்கம் வாங்கும் போது, வாங்கிய தங்கத்தை எவ்வளவு நாள் வைத்திருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு கிடையாது. 
    • எப்போது வேண்டுமானாலும் வாங்கலாம், எப்போது வேண்டுமானாலும் விற்கலாம் (பங்குச்சந்தை இயங்கும் நேரத்தில்).

    4. சாவரின் [Sovereign] தங்கப்பத்திர திட்டத்தின் மூலம் முதலீடு செய்வது

    • சாவரின் [Sovereign] தங்கப்பத்திரம் என்பது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படும் ஒரு திட்டமாகும்.
    •  இந்த திட்டம் திட வடிவ தங்கத்தில் கிடைக்கும் அனைத்து நன்மைகளையும் வழங்குகின்றன.
    • இந்த தங்கப்பத்திரம் விற்பனை ஆண்டுக்கு 6 முறை மட்டுமே நடைபெறும். இந்த முறையில் 1 கிராம் முதல் 4 கிலோ தங்கம் வரை வாங்கி கொள்ளலாம்.
    • வாங்கிய தங்கத்தின் விலைக்கு ஆண்டுக்கு 2.5% வட்டி வழங்கப்படும். அதை 6 மாதத்திற்கு ஒருமுறை வங்கி கணக்கில் ரிசர்வ் வங்கி வரவு வைத்துவிடும்.
    • இந்த ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப்பத்திரத்தை இந்திய அஞ்சலகத் துறை, வங்கிகள் போன்றவற்றின் மூலம் வாங்கி கொள்ளலாம். மேலும் ஆன்லைனிலும் பெற்றுக்கொள்ளலாம். 
    • ஆன்லைனில் பெற்றுக்கொள்வதன் மூலம் கிராமிற்கு ரூ.50 தள்ளுபடி வழங்கப்படும். அதாவது கிராம் ரூ.6000 எனில் ரூ.5950 செலுத்தி தங்கப்பத்திரத்தை பெற்றுக்கொள்ளலாம்.
    • இந்த தங்கப்பத்திரம் 8 ஆண்டுகளுக்கு Agreement போட்டு கொடுக்கப்படும். ஒருவேளை 8 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பணம் தேவையென்றால் 5 ஆண்டுகளுக்கு பிறகு பணத்தை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
    • நினைத்தவுடன் பத்திரத்தை அடமானம் வைத்து பணம் பெற்றுக்கொள்ள முடியாது என்பது தான் இந்த தங்கப்பத்திர திட்டத்தின் ஒரே ஒரு குறையாகும்.
    •  தங்கப்பத்திரத்தை விற்பனை செய்ய முடியும். ஆனால் அதில் சில குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
    • இந்த திட்டம் யாருக்கு லாபம் என்றால்... ஒரு குறிப்பிட்ட தொகை உங்களிடம் உள்ளது, அந்த தொகை அடுத்த 8 வருடத்திற்கு எதற்கும் தேவைப்படாது எனில், அந்த தொகையை தங்கப்பத்திரமாக மாற்றினால் அதிக லாபம் பார்க்க முடியும்.
    • இதில் எது சிறந்தது? தங்கப்பத்திர திட்டத்தில் முதலீட்டுக்கு கொடுக்கப்படும் வட்டி, தங்கத்தின் விலை ஏற்றம் உள்ளிட்டவற்றால் லாபம் அதிகம் கிடைக்கும்.
    • இதுவே பங்குச்சந்தைகளில் GOLD ETF என்பதில் முதலீடு செய்தால் 2.5% வட்டி கிடைக்காது. 
    • ஆனால் நினைத்த உடனேயே பங்குச்சந்தைகளில் அலுவலக நாட்களில் விற்றுக்கொள்ளலாம்.
    • மேலும் முதலீடு என்ற நோக்கத்தில் நகைக்கடைகளில் தங்கத்தை வாங்கினால் லாபம் கிடைக்காது.
    •  ஆனால் அந்த தங்கத்தை எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் அடகு வைத்தோ, விற்றோ பணம் பெற்றுக்கொள்ள முடியும்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    எளிய முறையில் உங்கள் வீட்டில் பட்ஜெட் போடுவது எப்படி?Best savings plan in India 2024

    எளிய முறையில் உங்கள் வீட்டில் பட்ஜெட் போடுவது எப்படி?Best savings plan in India 2024 முதலில் வீட்டில் யாரெல்லாம் வேலை செய்கிறீர்கள் என்பதையு...