![]() |
| Cash flows will make rich |
உங்களை பணக்காரராக
மாற்றும் ஐந்து
பணப்பழக்கங்கள்..
(Cash Flows That Will Make You Rich)
ஐந்து பண பழக்கவழக்கங்கள் மூலம் நீங்கள் அதிகப்படியான செல்வத்தை பெறலாம். எவ்வாறு என்று பார்க்க ரெடியா?
1. வணிகத்தின் பங்கு
- சிறந்த முறையில் வணிக நிறுவனங்களை நடத்தும் தொழில்முனைவோர் அதனால் கிடைக்கும் இலாபத்தை மீண்டும் முதலீடு செய்து, அதை ஆண்டுதோறும் அதிகரித்து ஊழியர்களை விட அதிகமாக, செல்வத்தை சேர்ப்பதாக உலக பணக்காரர்களின் தரவரிசை எடுத்துக்காட்டுகிறது.
- பலர் வணிகப்பங்கு செய்வதை மறுக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் சந்தையின் தினசரி மாற்றத்தால் பயமுறுத்தப்படுகிறார்கள்.
- ஆனால், நீங்கள் அதிலிருந்து விலகி, ஒரு வணிக நிறுவனத்தின் பங்குகளை வாங்கும்போது அதில் பாதி உரிமையாளராக மாறிவிடுவீர்கள்.
- இவ்வாறு நீங்கள் நினைத்தால், முதலீடு செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவீர்கள்.
- எனவே வணிக உரிமையாளராக இருக்கும் உங்கள் மனநிலையானது, வணிகத்தைப் புரிந்துகொள்ள அதிக முயற்சி எடுக்க தூண்டும்.
- மேலும் வணிக வீழ்ச்சியின் மூலம் முதலீட்டில் ஈடுபட உங்களுக்கு உதவுகிறது. நீங்கள் பங்குகளைத் தேர்ந்தெடுப்பதில் திறமையற்று இருந்தால், அதற்கு எப்போதும் பரஸ்பர நிதிகள் உதவியாக உள்ளன.
2. சிக்கனம்
- சிக்கனமாக இருத்தல்பெரும்பாலும் பெரிய பணக்காரர்கள் மிகுந்த கஞ்சத்தனம் உள்ளவர்களாக தான் இருப்பார்கள்.
- ஏனெனில் பல இந்திய பணக்காரர்கள் செல்வத்தை உருவாக்குவதற்கும், உருவாக்கிய செல்வத்தைப் பாதுகாப்பதையும் பெரிதாக எண்ணுவார்கள்.
- அவர்கள் ஆடம்பரத்தை பெரிதாக எண்ண மாட்டார்கள். சிக்கனமான மனப்பான்மையுடன் வளர இரண்டு பழக்கங்கள் உதவுகின்றன.
- அவை:ஒன்று தாமதமான மனநிறைவுக்குப் பழகி கொள்வது. அதாவது நீங்கள் பெரிதாக ஒரு பொருளை வாங்க நினைத்தால், அது இப்போது தேவையா என்று எண்ணி எவ்வளவு தூரம் தள்ளிப் போடலாம் என உங்களுக்குள்ளே கேட்டுக்கொள்ளுங்கள்.
- இரண்டாவதாக செலவுக்கு கொடுக்கும் முன்னுரிமையை சேமிப்பிற்கு கொடுங்கள்.
- கைக்கு பணம் வந்தவுடன் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதியை முதலீடு செய்துவிட்டு, மீதியை மட்டும் செலவு செய்யுங்கள்.
- மியூச்சுவல் ஃபண்டுகளில் சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் (SIP) போன்ற பல முதலீட்டு வழிகள் உள்ளன.
- அவை நீங்கள் செலவழிப்பதற்கு முன்பே முதலீடு செய்ய உதவியாக இருக்கின்றன.
3. விரைவான முதலீடு
- அதிகமாக யோசனை செய்வதுஅதிகமாக யோசித்து அதில் மூழ்கி விடுவதால், பலர் முதலீடு செய்வதை பற்றி தள்ளிப் போடுகிறார்கள்.
- அவர்களுக்கு ஏற்றவாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காக, சரியான நேரம் வரவேண்டும் என்று காத்திருக்கிறார்கள்.
- இவ்வாறு அதிகமாக யோசிக்காமல், விரைந்து செயல்பட்டு முதலீட்டிற்கு போதுமான நேரத்தை செலுத்தினால், நிலையற்ற சொத்துக்கள் கூட நல்ல வருமானத்தை கொடுக்கும்.money saving
- முதலீடுகளை கணக்கிடும்போது, பலர் வருமானத்தில் கவனம் செலுத்துகிறார்கள். மேலும் எல்லாவற்றையும் வேண்டாம் என்று ஒதுக்குகிறார்கள்.
- சரியான நேர முதலீட்டை தேர்ந்தெடுக்க காத்திருப்பதை விட, முன்கூட்டியே முதலீட்டை தொடங்கி, சொத்துக்களை நீண்ட காலம் வேலை செய்ய வைப்பது மிகவும் அவசியமாகும்.
4. கடன் வாங்குவதை தவிர்த்தல்
- நீங்கள் முதலீடு செய்யும் போது கூட்டுவட்டி உங்கள் பணத்தைப் பெருக்கினால், நீங்கள் கடன் வாங்கும் போது விரைவில் அதற்கு ஈடான அழிவை ஏற்படுத்துகிறது.
- அதாவது எல்லாவற்றையும் வாங்குவதற்கு EMI-களை (சமமான மாதத் தவணைகள்) தேர்ந்தெடுப்பவர்கள், அதற்கு எவ்வளவு பணத்தை அவர்கள் வங்கியில் ஒப்படைக்கிறார்கள் என்பதை அறிய மறுக்கிறார்கள்.
- நீங்கள் 8.5 சதவீத வட்டியுடன் ₹10 லட்சம் மதிப்பிலான காரை வாங்கும்போது, ஐந்து வருட முடிவில் ₹20,517 ரூபாய் EMI சமாளிக்கக் கூடியதாக இருக்கும்.
- ஆனால் ஐந்து வருட முடிவில் வங்கியில் ₹12.3 லட்சத்தை செலுத்தியிருப்பீர்கள். நீங்கள் கார் வாங்குவதற்கு சேமித்திருந்தால் கூட இவ்வளவு பணம் தேவைப்பட்டிருக்காது.
5. முதலீடு அதிகப்படுத்துதல்
- சொத்துக்கள் மற்றும் வாய்ப்பு உடைதல்சிலர் சிக்கனமாகவும் இருப்பார்கள்.
- தவறாமல் முதலீடும் செய்வார்கள். ஆனால் அவர்களின் போர்ட்ஃபோலியோவையும் (முதலீட்டாளர்களுக்குச் சொந்தமான பரந்த அளவிலான சொத்துக்களின் தொகுப்பு) ஒருபுறம் கவனித்துக் கொள்கிறார்கள்.
- மேலும் அவர்கள் சந்தை நிலவரங்களை தீவிரமாக கண்காணிக்கிறார்கள்.
- அதிக வருமானத்திற்காக அவர்களின் சொத்துக்கள் அல்லது தயாரிப்புகளை அடிக்கடி மாற்றுகிறார்கள்.
- அவர்களின் இந்த பழக்கம் செல்வத்தை உருவாக்குவதற்கு மிகப்பெரிய தடையாக அமையும்
- எனவே நீங்கள் நல்ல முதலீடுகளைத் தேர்ந்தெடுத்து, அதில் போதுமான வருமானத்தை பெற்றவுடன், உங்களுக்குப் பணம் தேவைப்படும் வரை உங்கள் போர்ட்ஃபோலியோவை (முதலீட்டாளர்களுக்குச் சொந்தமான பரந்த அளவிலான சொத்து


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக