நம் வாழ்வில் பட்ஜெட் ஏன் முக்கியம்.Budget planning important?
- பட்ஜெட் இந்த வார்த்தையை அடிக்கடி எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கா?
- நாட்டின் செலவீனங்களை கவனிக்க ஆண்டுதோறும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
- அப்போது செய்திகளில் இந்த வார்த்தையை அடிக்கடி கேட்டிருப்பீர்கள்.
- எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்லை என்று புலம்புபவரா நீங்கள்
- இனி இப்படி பட்ஜெட் போடுங்கள்.. உங்கள் சேமிப்பும், வருமானமும் அதிகரிக்கும்.
பட்ஜெட் என்றால் என்ன?
பட்ஜெட் என்பது வரவு செலவை கணக்கிடும் ஒருமுறை ஆகும்.
பட்ஜெட் ஏன் முக்கியம்?
- இவ்வளவு பெரிய நாட்டை ஆள பட்ஜெட் தேவைப்படும் பொழுது நம் வீட்டு கணக்கிற்கு பட்ஜெட் எவ்வளவு முக்கியம்.
- நம் நாட்டில் மாத சம்பளம் வாங்கி அதில் குடும்பம் நடத்தும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை தான் அதிகம்.
- அப்படி மாத சம்பளத்தில் வாழ்பவர்களுக்கு பட்ஜெட்டின் முக்கியத்துவம் தெரியும்.
- சிலர் பட்ஜெட் என்பதை பெரிய பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.
- அப்படிப்பட்டவர்கள் கடனில் சிக்கி தவித்து கொண்டிருப்பார்கள்.
- எதிர்கால தேவைகளுக்காக அதிக நிதியைச் சேமிப்பதற்கு நேரடியாக விகிதாசாரமாக திகழும்.சேமிப்பு முக்கியம்.
- ஆனால் அதைவிட சேமிப்பு, செலவுகள் போன்றவற்றின் பட்ஜெட்டை உருவாக்குவதும் மிகவும் அவசியம்.
- அதனால் உங்கள் நிதித் திட்டத்தில் சமநிலையை உருவாக்க முடியும்.
- இவ்வாறு பட்ஜெட்டை உருவாக்கும்போது உங்களுக்குள் ஒழுக்க உணர்வு தோன்றும்.
- பட்ஜெட்டை உருவாக்குவது அவசரகாலத்தில் தேவைபடக்கூடிய நிதியைச் சேமிக்க உதவும்.
செலவு அதிகமாகிக் கொண்டே போகிறதா?.. இனி இப்படி பட்ஜெட் போடுங்க..!!
பட்ஜெட்?
- முதலில் பட்ஜெட்டில் நாம் செய்யும் தவறுகளை தெரிந்து கொள்வோம்
- நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கின்றீர்கள்?
- எவ்வளவு செலவு செய்கின்றீர்கள்? என்பதை எழுதிக் கொள்ளுங்கள்.
- நீங்கள் வாங்கும் சிறிய பொருளிலிருந்து பெரிய பொருள் வரை எதுவானாலும் பட்ஜெட்டில் எழுதுங்கள்.
- இவ்வாறு எழுதி வைப்பதன் மூலம் என்னென்ன செலவு செய்கின்றீர்கள்?
- என்பதையும், எதற்கெல்லாம் வீண் செலவு செய்கின்றீர்கள்?
- என்பதையும் கண்டுபிடிக்க முடியும்.இப்பொழுது உங்கள் பட்ஜெட்டை நீங்களே பரிசோதித்து பாருங்கள்.
- இதில் தேவையில்லாதது என்பது எது?
- ஆடம்பர செலவு தானே.. அதாவது, மற்றவர்களிடம் உள்ளது என்று அதைப் பார்த்து வாங்கி வைப்பது, புதிதாக வந்துள்ளது என்று அதை வாங்கி வைப்பது, மிகவும் பிடித்துள்ளது என்று பயன்படுத்தாமல் வாங்கி மட்டும் வைப்பது இது போன்றவையாக இருக்கலாம்.
- மற்றொன்று அடிக்கடி வெளியில் உணவு உண்பது.
- நம்மில் பெரும்பாலானோர் செய்யும் மிகப்பெரிய தவறென்றால் அது இதுதான்.
- இவ்வாறு அடிக்கடி வெளியில் உணவு உண்பது, நமது சேமிப்பையும், ஆரோக்கியத்தையும் நமக்கே தெரியாமல் பாதிக்கிறது.
- அடுத்ததாக கடன் வாங்குவது.. ஏதோ ஒரு தேவைக்காக கடன் வாங்கிவிட்டு, அதை கொடுக்க முடியாமல், அதைக் கட்ட மற்றொரு இடத்தில் கடன் வாங்குவது என்று கடனை அதிகப்படுத்திக் கொண்டே செல்வது போன்ற செயல்களாக இருக்கலாம்.
- இவ்வாறு நாம் தேவையற்ற செலவுகளை கண்டுபிடிப்பதன் மூலம் அடுத்த மாதத்திற்கான பட்ஜெட்டை நம்மால் சரிசெய்ய இயலும்.
- இதனால் சேமிப்பும் அதிகரிக்கும்.நாம் செய்யும் மற்றொரு தவறு, சம்பாதித்த பணத்தை செலவு செய்யாமல் அப்படியே வைத்திருப்பது.
- சம்பாதித்த பணத்தை செலவு செய்யாமல் வைத்திருந்தால் மட்டும் போதாது. இவ்வாறு வைத்திருப்பதால் பணம் கூடுதலும் ஆகாது.
Budgeting Gives You Control of Your Finances
Well, a budget keeps you in the 'know' about how much money you have, how much money you're saving, and/or how much you might be over-extending your resources. In other words, budgeting puts you in charge of what you can afford and when you can afford it
2.Why is having a budget is important?
A budget is a plan that shows you how you can spend your money every month. Making a budget can help you make sure you do not run out of money each month. A budget also will help you save money for your goals or for emergencies.
3.How to create a budget
- Calculate your net income.
- List monthly expenses.
- Label fixed and variable expenses.
- Determine average monthly costs for each expense.
- Make adjustments.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக