எளிய முறையில் உங்கள் வீட்டில் பட்ஜெட் போடுவது எப்படி?Best savings plan in India 2024
- முதலில் வீட்டில் யாரெல்லாம் வேலை செய்கிறீர்கள் என்பதையும், அவர்களது வருமான நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
- யார் யாருக்கு எவ்வளவு பணம் வரும் என்பதை முதலில் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்.
முதல் செலவு சேமிப்பு:
- உங்களின் முதல் செலவே சேமிப்பாக இருக்கவேண்டும்.
- மியூச்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ், குழந்தைகளின் கல்வி செலவுகளுக்காக சேமிக்கும் பணம் என அனைத்திற்கும் முதலில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
அத்தியாவசிய செலவு:
- வீட்டில் வாங்கும் பால், மளிகை, மருந்துகள், தண்ணீர், காய்கறி செலவுகளை குறைக்க முடியாது.
- போன மாதம் இவற்றில் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு செலவானது என்று கணக்கிட்டு கொள்ளுங்கள்.
- இந்த மாத வருமானத்தில் இருந்து அதைக் கழித்துக்கொள்ளுங்கள்.
இந்த மாத தேவைகள்:
- ஒரு சில மாதங்களில் கல்வி கட்டணம், மின்சாரக் கட்டணம், வீட்டுவரி, பாலிசி சந்தா, வண்டி டியூ, போன் கட்டணம் என்று சில செலவுகள் வரும்.
- அவற்றையும் பட்டியலிட்டு வருமான கணக்கில் கழித்துக்கொள்ளுங்கள்.
- கடன் இருந்தால் அதற்கான மாத கட்டணம் எவ்வளவு என்று பார்த்து அதையும் கழிக்கவும்.
திட்டமிடுங்கள்:
- அவசிய செலவுகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள பணம் கையில் எவ்வளவு இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
- இந்த மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம், என்னென்ன செலவுகளை செய்யக்கூடாது என்பதைத் திட்டமிட்டுக்கொள்ள வேண்டும்.
சீசன் செலவுகள்:
- இதே போல தீபாவளி, பொங்கல், ஊர் திருவிழா, உறவினர்கள் திருமணம் என சீசனுக்கு ஏற்ப செலவுகள் வரிசை கட்டும்.
- அந்த செலவுகளுக்கு தேவையான பணத்தை திட்டமிட்டு ஒதுக்கி வைத்தால் கடன் வாங்க வேண்டிய அவசியம் இருக்காது.
- இப்படி கணக்குகளை பிரித்து எழுதிக்கொண்டால் ஒரு மாதத்திற்கு எவ்வளவு செலவாகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
- செலவுகள் போக கையில் எவ்வளவு பணம் இருக்கும் என்று தெரிந்துவிடும்.
- வரவு எட்டணா செலவு பத்தணா என்று ஆகாமல், செலவு ஆறணா என்று குறைக்க இந்த பட்டியல் உதவும்.
- இப்படி பட்டியலிடும் போது தேவையற்ற செலவுகளை கண்டறிந்து அதை தவிர்க்கலாம்.
- இவற்றை எல்லாம் மாதத்தின் முதலிலேயே கணக்கிட்டால் தான் அந்த மாதத்தில் எப்படி செலவாகும்.
- மாத கடைசி வரை பணத்தை எப்படி கொண்டு செல்வது என்று புலப்படும்.
கூடுதல் டிப்ஸ்:
- ஒரு சில மாதங்களில் சேமிப்பு போக கையில் பணம் இருக்கும்.
- அந்த மாதிரி நேரங்களில் கையில் உள்ள பணத்தைக் கொண்டு கடனின் அசலை கட்ட முயலுங்கள்.
- அப்போது வட்டியின் அளவும் குறையும்.
- கடன் கட்டும் காலமும் குறையும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக